ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

2 months ago 9

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மாணவர், மாணவியர் தரமான கல்வியையும், ஒழுக்கத்தையும் பெற இயலும். ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், உத்தேசப் பட்டியல் வெளியிட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பணி நியமன ஆணைகள் வழங்காததன் காரணம் என்னவென்று புரியவில்லை.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்ற அவசரத்தினைக் கருத்தில் கொண்டு நியமன தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,800 ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article