ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

5 hours ago 2

நிங்போ,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் இன்று முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.4¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பிரனாய், லக்சயா சென், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷூ ரஜாவத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் லக்சயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் லீ சியா ஹாவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மாள்விகா பான்சோத், அனுபமா உபாத்யாயா, ஆகார்ஷி காஷ்யப் உள்ளிட்ட இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். சிந்து தனது முதல் சவாலை இந்தோனேசியாவின் எஸ்தெர் நுருமியுடன் தொடங்குகிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி, ஸ்ருதி மிஸ்ரா - பிரியா ஜோடியும், ஆண்கள் இரட்டையரில் ஹரிகரன் அம்சகருணன் - ரூபன் குமார், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் - சாய் பிரதீக் இணையும், கலப்பு இரட்டையரில் ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி, சதீஷ் கருணாகரன் - ஆத்யா வரியாத், துருவ் கபிலா - தனிஷா கிரஸ்டோ, ஆஷித் சூர்யா-அம்ருதா பிரமுதேஷ் கூட்டணியும் களம் காணுகிறார்கள்.

Read Entire Article