
நிங்போ,
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ இணை, சீன தைபேயின் யி ஹோங் வெய்- நிகோல் கோன்ஜாலெஸ் சான் ஜோடியுடன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 12-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது . இதனால் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.