
லாகூர்,
ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி காலியானது.
இந்த பதவிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மொஷின் நக்வி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.