
சென்னை,
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து இன்று 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களில் குவிந்தனர். சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.