சென்னை: 2025 புத்தாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; பெரும் நம்பிக்கையோடும் பெரு மகிழ்ச்சியோடும் வரும் புத்தாண்டை (2025) வரவேற்கிறோம். கடந்து போகும் ஆண்டின் அனுபவத்தை பரிசீலித்து, பயனுள்ள படிப்பினைகளை பெறுவது அவசியமாகும். வகுப்புவாத சக்திகளை அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற 2025-ல் முனைப்புடன் செயல்பட உறுதி ஏற்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டமும் நாடாளுமன்ற ஜனநாயக முறைகளும் பேராபத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
The post ஆங்கில புத்தாண்டு: இந்திய கம்யூ.கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து appeared first on Dinakaran.