அவிநாசியில் இயற்கை சுற்றுச்சூழலில் ரூ.2.10 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

5 months ago 13

 

அவிநாசி, நவ.26: அவிநாசியில் இயற்கை சுற்றுச்சூழலில் ரூ.2.10 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றது. அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் கடந்த 25 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகின்றது. இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து துறையின் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து புதிய கட்டிடப்பணிகளும் பூமி பூஜையும் நடைபெற்றது. அரசு போக்குவரத்து துறையின் சார்பில் அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் நால் ரோடு அருகில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சொந்தமாக கட்டிடம் இயற்கை சுற்றுச்சூழலில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது 75 சதவீத கட்டிடப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அவிநாசியில் இயற்கை சுற்றுச்சூழலில் ரூ.2.10 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் appeared first on Dinakaran.

Read Entire Article