அவரை நாங்கள் கட்டுப்படுத்தினால், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது - கம்மின்ஸ்

3 months ago 21

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகர். அவர் அற்புதமான பந்து வீச்சாளர். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தால், இந்த தொடரை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடி நாங்கள் பார்த்ததில்லை. அதனால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடைசியாக இந்திய அணி எங்கள் நாட்டுக்கு வந்து விளையாடிய 2 தொடர் முடிந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. அந்த தோல்வியை நாங்கள் மறந்து விட்டோம். நான் ரோகித் சர்மாவுடன் ஒருபோதும் இணைந்து விளையாடியதில்லை. அதனால் அவரை எனக்கு அதிகமாக தெரியாது. ஆனால் இந்திய அணி ஒருங்கிணைந்து, சரியான திட்டத்துடன் இருப்பதாக நினைக்கிறேன்.

அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி என இரு வித்தியாசமான வடிவத்திலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த உத்வேகத்துடன் நாங்கள் களம் காணுவோம். அதே நேரத்தில் இந்திய அணி கடந்த முறை இங்கு நடந்த தொடரை நினைவில் வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article