அவனியின் அழகிய ஆலயங்கள்

3 weeks ago 6

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: கோயில்களில் தீபாவளி !
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில், அவனி கிராமம், முல்பாகல் தாலுகா, கோலார் மாவட்டம், (கோலாரிலிருந்து 30 கி.மீ), கர்நாடக மாநிலம்.

காலம் : கோயில்கள், 10-ஆம் நூற்றாண்டின் நுளம்பர் காலத்தைச் சேர்ந்தவை. பின்னர் சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களால் ஆலயக்
கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

‘அவனி’ என்ற சொல்லுக்கு ‘‘பூமி’’ என்று பொருள். நுளம்பர் 8-11 ஆம் நூற்றாண்டில் ‘நுளம்பபாடி’ பகுதியை (இன்றைய ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குள் இருந்த பகுதி) ஆட்சி செய்த சிற்றரசர்கள் ஆவர். நுளம்ப வம்சத்தினர் அற்புத வேலைப் பாடுகளுடன் கூடிய ஏராளமான அழகிய ஆலயங்களை அமைத்துள்ளனர். அவனியில் உள்ள ஆலயங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கது.

`கோயில்களில் தீபாவளி !
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் குழுமம்’ என்றழைக்கப்படும் இவ்வாலயத்தினுள் ராமர், லட்சுமணர், பரதன் மற்றும் சத்ருக்னரின் பெயரில் சிவலிங்கங்கள் கொண்ட நான்கு முக்கிய கோயில்கள் உள்ளன. லட்சுமணலிங்கேஸ்வரர் மற்றும் பரதேஸ்வரர் கோயிலில் உள்ள இளங்கரும் பச்சை நிறக்கல்லிலான அலங்கார சிற்பங்கள் நிறைந்த நுழைவு வாயில் வியக்க வைக்கும்.

ஒவ்வொரு பக்கத்திலும் துவாரபாலகர்கள், சங்கநிதி மற்றும் பத்மநிதி, நுளம்பர் பாணி தூண்கள் கொண்ட உள் மண்டபங்கள், எழில்மிகு புடைப்புச் சிற்பங்களால் செழுமைப்படுத்தப்பட்ட மேற்கூரை என ஒவ்வொரு அம்சமும் காண்போரைக் கவரும்.பரதேஸ்வரர் கோயிலில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் மேற்கூரையில் அஷ்டதிக் பாலகர்களால் (திசைகளின் கடவுள்கள்) சூழப்பட்ட உமா – மகேஸ்வரரின் சிற்பம் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post அவனியின் அழகிய ஆலயங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article