கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு.. பீகாரில் தாமரை விதைகளுக்காக புதிய வாரியம்: ஒன்றிய பட்ஜெட் 2025

2 hours ago 1

டெல்லி : 2025-2026ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன்,

*நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது.

*இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் வளர்ச்சி, இளைஞர் நலன், சிறுகுறு தொழில், ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் விளங்குகிறது. வளர்ச்சியடைந்த தேசம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

*அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்.இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்.

*சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.

*கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

*தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும். ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்.

*தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

*பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

*சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.

The post கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு.. பீகாரில் தாமரை விதைகளுக்காக புதிய வாரியம்: ஒன்றிய பட்ஜெட் 2025 appeared first on Dinakaran.

Read Entire Article