அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

3 months ago 14

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குஜராத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குஜாரத் ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ததோடு, கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதேவழக்கில் சஞ்சய் சிங் தனியாக தாக்கல் செய்த மனுவை வேறு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, ஒரே மாதிரியான அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Read Entire Article