'அவசியமற்ற முடிவு'- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் சங்கம் பதில்

2 weeks ago 5

சென்னை,

சினிமா துறையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக நடிகர்கள் சம்பளம் உயர்வு, தயாரிப்பு செலவு அதிகரிப்பு, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சிக்கல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு,நட் நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில்,

'படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை தருகிறது. தன்னிச்சையான இந்த முடிவால் மிக பெரிய பாதிப்பிற்கு உள்ளாகப்போவது திரைப்பட துறை தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களும் என்பதை நாம் அன்னைவரும் உணர வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து உரையாடல் மூலமாக சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், அந்தத் தீர்வு எட்டப்படும் தொலைவில் இருக்கும்போது, வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற முடிவு, சிலரால் இடப்படும் முட்டுக்கடையாகவே கருதப்படும்.

அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான நடவடிக்கையில் ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதும் முன்னிலை வகித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வேண்டும். முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே, தொழிலாலர்கள் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article