அழிக்கால், பிள்ளைதோப்பில் கடலரிப்பு பகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

3 months ago 17

நாகர்கோவில், அக்.18: அழிக்கால், பிள்ளைதோப்பில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜய்வசந்த் எம்.பி ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குமரி மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி இரவு கடல் சீற்றம் அதிகரித்து அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் கடல் நீர் குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. சிலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த நிலையில் குளச்சல் தீயணைப்பு வீரர்கள் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் விஜய் வசந்த் எம்.பி அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வீடுகளில் உள்ள கடல் மணலை துரிதமாக அகற்றுவதற்கு தனது சொந்த செலவில் சிறிய ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கொடுத்தார். கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து குளச்சல் துறைமுகத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் பார்வையிட்டார்.

The post அழிக்கால், பிள்ளைதோப்பில் கடலரிப்பு பகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Read Entire Article