3-வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் கீப்பராக தொடர்வார் - பி..சி.சி.ஐ. அறிவிப்பு

7 hours ago 2

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. இன்றைய நாளின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 34-வது ஓவரில் பந்தை பாய்ந்து விழுந்து பிடிக்க முயற்சித்த போது காயமடைந்தார். இடது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்த அவர் வலியால் துடித்தார். தொடர்ந்து கீப்பிங் செய்ய இயலாது என்று கூறியதால் பெவிலியன் திரும்பினார் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் பணியாற்றினார். அவரது காயத்திற்கு இந்திய மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. இருப்பினும் பண்ட் 2-வது நாள் ஆட்டத்தில் களத்திற்கு திரும்புவாரா? இல்லையா? என்று கேள்வி நிலவியது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டத்திலும் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரிஷப் பந்த் குணமடைந்து வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார்" என்று பதிவிட்டுள்ளது.

Read Entire Article