
சென்னை,
தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் "தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான்" உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர்.மாதவனுடன் இணைந்து 'தே தே பியார் தே 2' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அழகாக இருக்க வேண்டும் என்று நான் எதையும் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது, "நான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. ஏனென்றால் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். அதேபோல யாராவது அழகாக காட்சியளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறில்லை" என்று தெரிவித்துள்ளார்.
