
ஆமதாபாத்,
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் ஆமதாபாத் எஸ்.ஜி. பைபர்ஸ் 8-7 என்ற கணக்கில் சென்னை லயன்சையும், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 8-7 என்ற கணக்கில் யு மும்பாவையும் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டங்களில் புனே ஜாக்குவார்ஸ்- கோவா சேலஞ்சர்ஸ் (மாலை 5 மணி), தபாங் டெல்லி- கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.