அலுமினிய முலாம் பூசி தங்கம் கடத்தல் - 2 பேர் கைது

3 hours ago 2

கொழும்பு,

இலங்கையின் தலைமன்னார் உருமலையில் இருந்து தமிழகத்தின் ராமஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்தியா, இலங்கை இடையேயான சர்வதேச கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, படகில் அலுமினிய முலாம் பூசி 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, படகில் தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த கடற்படையினர் பறிமுதல் தங்கத்தை காங்கேசன்துறை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

Read Entire Article