அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 40 பேர் தகுதி நீக்கம்..!!

2 hours ago 4

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 40 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் ஜன. 14 அலங்காநல்லூரிலும், நேற்று ஜன. 15 பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஜன. 16 நடைபெறுகிறது.

இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் களம் கண்ட காளைகள் 94; பிடிபட்ட காளைகள் 24 . அலங்காநல்லூரில் இதுவரை 401 காளைகள் களம் கண்ட நிலையில் 84 காளைகள் பிடிபட்டன. இதை தொடர்ந்து, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 4 ஆம் சுற்று நிறைவு பெற்றது. இதில், 24 பேர் எடை குறைவு, 14 பேர் போலி ஆவணங்கள் வழங்கியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 377 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு காளைகள் என மொத்தம் 40 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 40 பேர் தகுதி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article