களைகட்டிய மகா கும்பமேளா.. உத்திரபிரதேச அரசு வெளியிட்ட அதிரடி QR CODE முறை: பக்தர்கள் மகிழ்ச்சி..!!

2 hours ago 4

பாட்னா: காசி கும்பமேளாவில் உத்திரபிரதேச அரசு வெளியிட்ட அதிரடி QR CODE முறையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டாளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உலக மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது. உலகின் மிக பெரிய ஆன்மிக ஒன்றுகூடல் இந்த மகா கும்பமேளா என்றே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சன்பமத்தில் புனித நீராடி வருகின்றனர். மூன்று புனித நதிகள் ஒன்றுக்கும் இடத்தில் நீராடுவது பாக்கியம் என்றும் பாவக்கணக்குகள் திறந்து மோட்சம் உண்டாகும் என நம்பப்படுகிறது.

இந்த மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. மேலும் உத்திரபிரதேச அரசு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதாவது ,உத்திரபிரதேச மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே.சர்மா ஒரு புதிய QR CODE முறையை காசியில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த காசி கும்பமேளா நிகழ்ச்சியில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளதால், பக்தர்களுக்கு வழிகாட்டவும், தொலைந்தவர்களை கண்டுபிடிக்கவும் நகரின் 50,000 மின் கம்பங்களில் QR CODE களை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த QR CODE முறை பக்தர்கள் தங்களின் இருப்பிடத்தை காணவும் மின்சாரம் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

The post களைகட்டிய மகா கும்பமேளா.. உத்திரபிரதேச அரசு வெளியிட்ட அதிரடி QR CODE முறை: பக்தர்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Read Entire Article