அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

2 hours ago 4

மதுரை: அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, துணை முதல்வர் உதயநிதியுடன், அவரது மகன் இன்பநிதியும் வந்திருந்து போட்டியைக் கண்டு ரசித்தார். திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற்றது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலகலமாக நடந்து வருகிறது. போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். அவருடன் போட்டியைப் பார்க்க, அவரது மகன் இன்பதி நிதியும் உடன் வந்திருந்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள், துணை முதல்வர் உதயநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அமைச்சர் பி.மூர்த்தி, உதயநிதிக்கு விழாக்குழு சார்பில் பொன்னடை போர்த்தியபோது இன்பதிநிதிக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

Read Entire Article