ஈரோடு: கோபி அருகே கடன் பிரச்சினை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவரது மனைவி பாலாமணி (29). இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர். வந்தனா கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.