அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

2 months ago 10

சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ‘‘அறிவியல் ஆசிரியர் விருது” பெற விண்ணப்பிக்கலாம் என அறிவியல் நகரம் அறிவித்துள்ளது. இதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல், புவியியல், வேளாண் நடைமுறைகள் ஆகிய பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் நகரத்தால் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசு காசோலையாகவும், சான்றிதழுடன் இணைத்து வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் முறையான வழியாக அனுப்பப்பட வேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு டிசம்பர் 23ம் தேதியில் அல்லது அதற்கு முன்பாக அறிவியல் நகர அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் என அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

 

The post அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article