தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. டெக்னீசியன் ‘ஏ’: 13 இடங்கள். (பிட்டர்-5, கார்பென்டர்-6, எலக்ட்ரானிக்ஸ்-1, எலக்ட்ரிக்கல்-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்குறிப்பிட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ‘ஏ’: 9 இடங்கள் (எலக்ட்ரானிக்ஸ்- 1, கம்ப்யூட்டர்-2, எலக்ட்ரிக்கல்-2, மெக்கானிக்கல்-2, சிவில்-2). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.29,200-ரூ.92,300. தகுதி: மேற்குறிப்பிட்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. ஆர்டிஸ்ட் ‘ஏ’: 2 இடங்கள். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பைன் அல்லது கமர்ஷியல் ஆர்ட்டில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஆபீஸ் அசிஸ்டென்ட்: 6 இடங்கள். வயது: 25க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு நிமிடத்தில் ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.885/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://ncsm.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.05.2025.
The post அறிவியல் அருங்காட்சியகத்தில் டெக்னீசியன் appeared first on Dinakaran.