அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை :ராமதாஸ்

4 hours ago 2

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. மாநாடு நடைபெறவுள்ள இடத்தை ராமதாஸ் இன்று காலை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தைலாபுரத்தில் உள்ள வீட்டுக்கு அன்புமணி சென்றுள்ளார். அவரது வீட்டுக்கு அவர் செல்கிறார். பாமக எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத வெற்றி பெறும். ஏனென்றால் அப்படிப்பட்ட பலமான கூட்டணியாக இருக்கும். இந்து சமய அறநிலையத்துறை நிதியை எடுத்து கல்லூரி கட்டுவது தவறில்லை. கோயில்களுக்கு சொந்தமாக நிலங்களோ, பணமோ அதிகமாக இருந்தால் அதை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கேட்டு பெறுவோம் என்றார். கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, இனிமேல் சரியாக முறையாக உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும். உங்கள் சந்தேகங்கள் போக்கப்படும் என்றார். பின்னர் விருத்தாசலத்தில் நடைபெறும் கடலூர் மேற்கு மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் சென்றார். இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி. வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பொதுச்ெசயலாளர் முரளிசங்கர் உள்ளிட்ட முக்கிய
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

The post அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை :ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article