அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

4 hours ago 2

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read Entire Article