அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி யாகம் திரளான பக்தர்கள் வழிபாடு

3 months ago 18

ஓசூர், அக்.11: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேரண்டபள்ளி சிவசக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், நவராத்திரி உற்சவம் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மேலும் துர்காஷ்டமியை முன்னிட்டு நவ துர்க்கை யாகம் நடந்தது. தொடர்ந்து 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட, சிறப்பு லட்சார்ச்னை வழிபாடுகளும் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி யாகம் திரளான பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article