அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு

4 months ago 30
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி, ஊர் மக்களை அடியாட்களை வைத்து அடித்ததாக கூறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கௌப்பாறை கிராமத்தில் உள்ள குரங்கனேரி சாலையை சுமார் 20 வருடங்களாக பயன்படுத்தி வந்த நிலையில், சாலை இருக்கும் இடத்தை தான் கிரையம் பெற்றதாக கூறி சேகர் என்பவர் ஊர்மக்களை அவ்வழியாக செல்ல தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read Entire Article