அருணாச்சலில் உறைந்த ஏரியில் நடந்த 4 பேர் தவறி விழுந்தனர்

4 months ago 13

இட்டாநகர்: அருணாச்சலில் உறைந்து போன செலா ஏரியில் நடக்க முயன்ற 4 சுற்றுலா பயணிகள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருணாச்சலபிரதேச மாநிலம் தவாங் மாவட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் செலா ஏரி உள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த ஏரி உறைந்துவிட்டது. உறைந்த செலா ஏரியின் பனிப் பரப்பில் நடக்க முயன்ற பெண் உள்பட 4 சுற்றுலாப் பயணிகள் தவறி அதில் விழுந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அங்கு இருந்தவர்கள் தவறி விழுந்த 4 சுற்றுலா பயணிகளையும் பனிக்கட்டி நீரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த தகவலை தவாங் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் ஹக்ராசோ கிரி தெரிவித்தார். 4 சுற்றுலா பயணிகள் பனிக்கட்டி உறைந்த ஏரியில் சிக்கித்தவிப்பதையும், அவர்களை மீட்கும் பணி நடப்பதையும் வீடியோவாக வெளியிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

 

The post அருணாச்சலில் உறைந்த ஏரியில் நடந்த 4 பேர் தவறி விழுந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article