
சண்டிகர்,
அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 இளைஞர்கள் இருந்தனர். இந்நிலையில் பஞ்ச்குலா-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.