அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

3 months ago 19

சென்னை: வியட்நாமைச் சேர்ந்த FreeTrend நிறுவனம் அரியலூரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில், காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காலணி உற்பத்தி ஆலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தயாரிப்பு ஆலை அமைத்துள்ள நிலையில், இப்பிராந்தியம் காலணி உற்பத்திக்கென தனித்துவ முனையமாக மாறியுள்ளது

இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் எடுத்து வருகிறது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பிரீ ட்ரெட்ண்ட் நிறுவனம் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் பிரீ ட்ரெட்ண்ட் நிறுவனம் ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலை அமைவதன் மூலம் 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இன்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த முதலீட்டு பட்டியலில் Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green ஆகிய நிறுவனங்கள் தங்கள் தொழிசாலையை தமிழ்நாட்டில் அமைத்து செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, கோவை, சென்னை, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழிசாலைகள் அமைந்துள்ளது.

The post அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல். appeared first on Dinakaran.

Read Entire Article