அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

1 week ago 8

திருமயம்: அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மிரட்டுநிலையில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரம் சென்று, வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தூரம் 6 மைலாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற மிரட்டுநிலை – புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Read Entire Article