அரபிக்கடலில் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

3 months ago 23

புதுடெல்லி,

தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிகள் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிழக்கு திசை காற்று தமிழகத்தில் உள்ளே செல்ல வாய்ப்பு என்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read Entire Article