அரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது

3 months ago 20

சென்னை,

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் நடைபெறவுள்ள தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதில் முதல்கட்ட தேர்வு நாளை முதல் 10-ந்தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு வருகிற 22 முதல் 25-ந்தேதி வரையும், 3-ம் கட்ட தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 26 முதல் 29-ந்தேதி வரையும், 4-ம் கட்ட தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் நடைபெற உள்ளன. தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ என்ற மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.

இதையடுத்து தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும், தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும், தேர்வு முடிந்த பிறகுவிடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Read Entire Article