மதுரை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி உட்பட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விரைவில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆதவா மாணவர்கள் நல அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துதல், கற்பித்தல், பயிற்சி அளித்தல் தொடர்பாக கல்வித் துறையுடன் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு மாவட்டங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.