புதுடெல்லி: அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை 6 மாதத்தில் சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1985ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ேவலை தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 2010 ஜூலை7ல், அதாவது அவர் ஓய்வு பெறுவதற்கு 2 மாதத்திற்கு முன்பு தான் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது குறித்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில்,’ அரசு வேலைக்கு தேர்வு செய்தவர்களின் சான்றிதழ், தேசியம், உண்மைத்தன்மை தொடர்பான ஆவணங்களை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் சரிபார்க்க வேண்டும்’ என்றனர்.
The post அரசு வேலைக்கு தேர்வு செய்தால் 6 மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.