அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு .!

6 months ago 22
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கும் - போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன் என்பவர் கொலை வழக்கில் கைதான  7 பேரை காரிப்பட்டி போலீசார் நேற்றிரவு மருத்துவமனை பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் செந்தில்குமார், தான் மட்டுமே இருப்பதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி போலீசாரிடம் சொன்னதாகவும், ஆனால் கொலைக்குற்றவாளிகள் என்பதால் உடனே மருத்துவ பரிசோதனை செய்யும்படி போலீசார் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை இரு தரப்பினரும் செல்போனில் படம்பிடித்தபோது தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. 
Read Entire Article