அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களை நியமிக்க எம்பி கோரிக்கை

4 months ago 13

பரமக்குடி, ஜன.8: பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட தலைமை மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இன்னொருபுறம் வேலை நேரங்களில் டாக்டர்கள் மருத்துவமனைகளில் இல்லாததால் திடீரென நோய் தாக்குதல் ஏற்பட்டும், விபத்துகள் ஏற்பட்டும், மாரடைப்பு ஏற்பட்டும் இரவு நேரங்களில் உயிருக்கு போராடும் நிலையில் வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர் இல்லை என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின்சாரம் தாக்கிய ஒருவரை இரவு நேரத்தில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லை என்று சொல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர். அதற்குள் அவர் இறந்துள்ளார். அதேபோல் புளியங்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி உள்ளனர். ஆனால், அங்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதேபோல் ஏராளமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

The post அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களை நியமிக்க எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article