அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து; டிரைவர் பலி, 6 பேர் படுகாயம்

3 months ago 21

திருவண்ணாமலை ,

சென்னையில் இருந்து போலூர் நோக்கி அரசுபஸ்  ஒன்று வந்தவாசி, சேத்துப்பட்டு சலையில் வந்துகொண்டிருந்தது. பஸ்ஸை டிரைவர் காசி என்பவர் ஓட்டிவந்தார். இதேபோல் ஆழியூர் கிராமத்திற்கு கோவில் கும்பாபிஷேகத்திற்காக சேர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் எதிரே வந்துகொடிருந்தது. இந்த வேனை பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்து கொழப்பலூர் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும் சரக்குவேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் மோகன்சம்பவ இடத்திலேயேஉடல் நசுங்கி பலியானார் அரசு பஸ் டிரைவர் காசி பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 5 பேரும்,சரக்கு வேனில் பயணித்த ஒருவரும் உள்பட 6 பேர் படுகாயங்களுடன் வந்தவாசி,சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read Entire Article