
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தியுடன் 'சர்தார் 2', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'சர்தார் 2' படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,
"நான் நடித்த தெலுங்கு படமான 'நா சாமி ரங்கா'-வைப் பார்த்த பிறகு 'சர்தார் 2' பட தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். அந்தப் படத்தில் நான் ஒரு பாரம்பரிய பெண்ணாக நடித்தேன். ஆனால் 'சர்தார் 2'-ல் இன்றைய தலைமுறையை சேர்ந்த ஒரு இளம் மாடெர்ன் பெண்ணாக நடிக்கிறேன். மாளவிகா மேனனுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை' என்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கும் இதில், எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.