
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கல்வி துறை சார்பில், 100 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பிறமொழியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கிறோம்
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். இம்மாதத்திற்குள், 3,000 ஆசிரியர்களுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்குவார்" என்றார்.