அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் டிசர்ட் அணியக்கூடாது என்பது மடத்தனம்: ஜெயக்குமாருக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

3 months ago 21

சென்னை: திமுக பவளவிழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 169 கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஓட்டேரியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது, வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதற்கு காரணம் திமுக. அனைவருக்குமான திட்டங்கள் தமிழ்நாடு அரசால் வகுக்கப்படுகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்கிற வகையில் முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்கு ஏற்ற திட்டங்களை கலைஞரின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்,’’ என்றார். அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது சொந்த செலவில் இளைஞரணி சின்னம் பொருந்திய டிசர்ட் அணிந்துகொள்கிறார். அதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டை எழுப்புவது மடத்தனம். திமுக ஆட்சியின் சிறப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்கட்சிகள் தேடித் தேடித் பூதக் கண்ணாடி போட்டு குறைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்,’’ என்றார்.

The post அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் டிசர்ட் அணியக்கூடாது என்பது மடத்தனம்: ஜெயக்குமாருக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article