சென்னை: தமிழ்நாடு அரசின் தீர்மானம் ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மக்களின் போராட்டத்திற்கும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக இயற்றிய தனித் தீர்மானத்திற்கும் கிடைத்த வெற்றிதான் டங்ஸ்டன் சுரங்க திடடம் ரத்து.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான போராட்டமும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது.
இதன் மூலம், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி, சமண திருத்தலம், வரலாற்று தொன்மையான இடங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு அரசின் தீர்மானம் ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.