அரசு அதிகாரியை திட்டியவர் கைது

3 months ago 8

 

வடமதுரை, பிப். 15: வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் சக்தி பொன்னுச்சாமி. இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்த போது வடமதுரை அருகேயுள்ள குருந்தம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (63) என்பவர் தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது ஊரில் உள்ள புளியமரத்தின் கிளையை சிலர் வெட்டி விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அதற்கு சக்தி பொன்னுச்சாமி தான் அவசர வேலையில் இருப்பதாகவும், மதியத்திற்கு மேல் வந்து ஆய்வு செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், உடனே வருமாறு கூறி சக்தி பொன்னுச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சக்தி பொன்னுச்சாமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ தாவூத் உசேன் வழக்குப்பதிந்து தங்கராஜை கைது செய்தார்.

The post அரசு அதிகாரியை திட்டியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article