அரசு அதிகாரியிடம் ரூ.63.8 லட்சம் மோசடி; குஜராத் சென்று 2 பேரை அதிரடியாக கைது செய்த தமிழக காவல்துறை

3 weeks ago 4

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே அய்யலூரை சேர்ந்த செல்வகுமாரி என்பவர், தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவல்துறையினரிடம் அளித்த புகாரில், டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக இன்ஸ்டாகிராம் செயலியில் வந்த தகவலை நம்பி, 63 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் பிரிவு போலீசார், குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்திற்கு நேரில் சென்று, ஷர்மா சுனில் குமார், ஷர்மா பன்சிலால் ஆகிய 2 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 4 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 7 ஏ.டி.எம் கார்டுகளை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் குஜராத்தில் உள்ள வதோதரா கோர்ட்டில் தமிழக காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை பெரம்பலூர் அழைத்து வந்து வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 2 பேரையும் திருச்சி சிறையில் அடைத்தனர். 

Read Entire Article