சென்னை: “எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். காலையிலே இது குறித்து விளக்கமளித்துவிட்டேன்.