அரசியல் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் குறிவைக்கப்பட்டிருக்கிறது - திருமாவளவன்

2 months ago 12
ஆட்சி அதிகாரம் என்ற அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தவெக தலைவர் விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யோடு கலந்துகொள்வது குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலேயே அணி மாறிவிடுவோம் என்று பேசுவது என்ன வகையான உளவியல் என்றும், இது திட்டமிட்ட சூது, சனாதன சூழ்ச்சி, உணர்ச்சிகளைத் தூண்டி நிலைகுலைய வைக்கும் சதி நிறைந்த முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பதாகவும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்கு உண்டு என்றும், அந்தக் கூட்டணியை சிதறடிப்பதற்கோ சிதைப்பதற்கோ எவ்வாறு இடமளிக்க இயலும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  
Read Entire Article