
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த வாய்க்கு வந்த கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று கூட துணை முதல்-அமைச்சரை ஒருமையில் பேசி உள்ளார். அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர், என்ன ஐ.பி.எஸ். படித்தார்? என்று தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது முதல்-அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் 'ஹேஷ்டேக்' பதிவு செய்துள்ளார். தனது கட்சியில் தான் முக்கியமானவர் என்பதை கட்சிக்காரர்களுக்கு காண்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார். நிச்சயமாக அதெல்லாம் டிரெண்டிங் ஆகப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.