அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

1 month ago 8

கோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நேற்று நடந்த அரசியலமைப்பு மரியாதை மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இரண்டு அம்சங்களை கொண்டது. ஒன்று ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகையை கண்டறிவது, மற்றொன்று அவர்கள் எந்த அளவுக்கு பொருளாதாரம் பெற்றுள்ளனர் என்பதை கண்டறிவது. பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஏனெனில் உண்மைகள் வௌிவருவதை இரண்டுமே விரும்பவில்லை. பள்ளிகளில் தற்போது தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய வரலாறுகள் சொல்லி தரப்படுவதில்லை. அவர்கள் பற்றிய வரலாற்றை அழிக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதை காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சிகளும் உறுதி செய்யும். மக்களவை, மாநிலங்களவையில் இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்குவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அக்னி வீரர் திட்டம் ராணுவ வீரர்களிடம் இருந்து ஓய்வூதியம், இழப்பீடு உள்ளிட்டவைகளை பறிக்கும் தந்திரம்” என ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்தார்.

 

The post அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article