
சென்னை,
தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
*மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது
*கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதுகிறது திமுக அரசு
* ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாசி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள்.
*மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழுங்கி வருகிறது.
*ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அமைத்தார்.
*இந்த குழுவின் இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார்.
* நீட் தேர்வு ஒருசாரருக்கு மட்டுமே பயன்படும்
*மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது
*அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்
*அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது
இவ்வாறு அவர் பேசினார்.