தேவையானவை:
தோல், விதை நீக்கிய அரசாணிக்காய் நறுக்கியது – 1 கப்,
புளி ஜலம் – நீர்த்தது – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
இடித்த பூண்டு – 4 பல்,
பச்சை மிளகாய் 2.
தாளிக்க:
நல்லெண்ணெய் – 50 கிராம், கடுகு, வெந்தயம் – தலா ½ டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, சிவப்பு மிளகாய் பொடி, பெருங்காயம் – சிறிது, கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, வெல்லம் – சிறிதளவு.செய்முறை: அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய அரசாணிக்காய், பச்சை மிளகாய், மற்றும் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டிய பின் புளி தண்ணி விட்டு, காய் வெந்து வருகையில் மேலும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, வெல்லம் சேர்த்து பரிமாறவும். தயிர் சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, ஊத்தப்பம் ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
The post அரசாணிக்காய் வற்றல் குழம்பு appeared first on Dinakaran.